அமெரிக்காவை தோற்கடித்த மனிதர் | (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-24)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-24)- நிராஜ் டேவிட்

வியட்னாம் யுத்தத்தின் போது அமெரிக்கா என்ற வல்லரது எண்ணிப்பார்க்க முயாத அளவிற்கு தோல்விகளையும், இழப்புக்களையும் சந்தித்துக்கொண்டிருந்தது.

எதனால் வியட்னாமில் அமெரிக்காவுக்கு தோல்வி மேல் தோல்வி வந்துகொண்டே இருந்தது?

அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசை வீழ்த்தலாம் எனற் நம்பிக்கையை, ஓர்மத்தை வியட்னாம் போராளிகளுக்கு வழங்கிக்கொண்டிருந்த சக்தி எது?

வியட்னாம் போராளிகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டத்தின் உண்மையான மூளை எது?

தடுமாறிக்கொண்டிருந்தார்கள் அமெரிக்க போரியல் வல்லுனர்கள்.

யுத்தம் ஆரம்பித்து பல வருடங்களுக்கு பின்னர்கூட, இந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை அமெரிக்காவின் படைத்துறைத் தலைமைக்கு.

ரஷ;ய உதவிகள்.. சீன உதவிகள்.. கெரில்லாப் போராட்டம்.. இது எல்லாமே புரிந்தது அமெரிக்க தலைமைக்கு..

ஆனால் அனைத்தையும் ஒருங்கணைத்துக்கொண்டிருந்த மூளை எது?

ஒரு கட்டத்தில் வியட்னாமில் இருந்த அமெரிக்கப்படைகளைத் திருப்பி அழைத்துவிடலாமா என்று அமெரிக்கத் தலைமை யோசிக்கும் அளவிற்கு, அங்கே தோல்வி ஒரு தொடர்கதையாகிக்கொண்டிருந்தது அப்போது.

அதற்கு மூல காரணம், வியட்னாமியர்களின் விடுதலை வேட்கை.

அப்படிப்பட்ட ஒரு விடுதலை வேட்கையை இரகசியமாக அவர்களுக்கு உருவாக்கிக்கொண்டிருந்தார் ஒரு போராளி.
வியட்னாம் போராட்டத்தின் ஆதி மூலம் அந்தப் போராளிதான்.

அமெரிக்கா வியட்னாமில் பெற்றுவந்த அத்தனை தோல்விகளுக்குமான மூளை – அந்த போளியிடம்தான் இருந்தது.

அந்த போராளியின் பெயர் ஹோ-சி-மீன்.

புதுப்புது கெரில்லாப் போரியல் யுத்திகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு தோல்வி அத்தியாயத்தை அமெரிக்காவுக்கு எழுதியவரும், உலகத்தின் போர் புத்தங்களில் இருந்து அமெரிக்காவினால் திட்டமிட்டு மறைக்கப்பட்டவருமான ஹோசிமீன் பற்றி பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளி ஆவணம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்