அமெரிக்கா எதற்காக சிறிய தேசங்களில் புரட்சிகளை ஏற்படுத்தியது?| (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-27)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-27)- நிராஜ் டேவிட்

1962ம் ஆண்டு சோவியத் யூனியனின் ராணுவ பலம், அமெரிக்க ராணுவ பலத்திற்கு மிகவும் நெருக்கமாக வந்துவிட்டதென்ற வதந்தி மிக வேகமாக பரவிக்கொண்டிருந்தது.

சாதாரண ஆயுதங்கள் தவிர தொலைதூரம் பாய்ந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், அணுகுண்டுகள், விமானந்தாங்கிக் கப்பல்கள் என்று சோவியத்தின் வளர்ச்சி பற்றி நிறையச் செய்திகள், நாடுகள் மத்தியில் அச்சத்துடன் பரவ ஆரம்பித்திருந்தன.

குறிப்பாக ரசாயன ஆயுதங்களின் உற்பத்தில் சோவியத் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவே உலகெங்கும் வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன.

யார் இந்த வதந்திகளை, செய்திகளைப் பரப்புகின்றார்கள் என்ற கேள்விக்கு, சிலர் அமெரிக்காவின் சீ.ஐஏ என்றும், வேறு சிலர் சோவியத்தின் உளவு அமைப்புக்கள் என்றும் பதில் வழங்கினார்கள்.உண்மை யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவோ இந்த வதந்திகளை முழுவதுமாக நம்பி, தனது ராணுவ பலத்தை ராட்சஸ பலமாக பெருக்க முடிவுசெய்தது அப்போது.

அதனால்தான் அப்படி சகட்டுமேனிக்கு தமது இராணுவத்திற்கு நிதிகளை ஒதுக்கிக்கொண்டிருந்தார்கள்.

முதற்கட்டமாக, ஹிரோஷிமாவை அழித்த அணு குண்டின் அளவில், அதே அளவு சக்திமிக்க 1500 அணுகுண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டன.

இவை தவிர அந்த நேரத்தில் புதிதாக அதிநவீன ஏவுகணைகளையும், எண்பது நீயூக்கிளியர் ஏவுகணைகளையும், அமெரிக்காவுக்கு வெளியே இருந்து செயற்படக்கூடிய விதமாக 80 ரிமோட் கண்ரோல் ஏவுகணைகளையும் தயாரித்துக் குவித்திருந்தது அமெரிக்கா.

இத்தனையும் போதாதென்று சோவியத் யூனியனை மட்டுமே குறிவைத்து, அமெரிக்காவில் இருந்து ஏவிவிட்டால் நேரே மொஸ்கோவில் போய் விழுந்து வெடிக்கக்கூடிய விதத்தில், சுமார் 1700 விசேட ரொக்கட்டுக்களை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைத்திருந்தது.

பனிப்போர் காலத்தில் அமெரிக்கா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-2)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-3)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-4)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-5)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-6)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-7)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-8)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-9)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-10)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-11)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-12)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-13)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-14)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-15)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-16)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-17)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-18)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-19)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-20)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-21)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-22)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-23)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-24)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-25)- நிராஜ் டேவிட்
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-26)- நிராஜ் டேவிட்
பகிரல்

கருத்தை பதியுங்கள்