ஸ்ரீலங்கா இராணுவத்துடன் கைகோர்த்த புளொட்|

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-18) – நிராஜ் டேவிட்

ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து திறீ ஸ்டார்| என்ற பெயரில் ஈழ மண்ணில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது பற்றியும், இந்த அமைப்புக்களுக்கு இந்தியாவின் றோ| அமைப்பு பின்பலமாக இருந்தது பற்றியும், கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம்.

இதேவேளையில், அக்காலப்பகுதியில் புளொட்| அமைப்பும் தமிழ் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவி நிலை கொள்ள ஆரம்பித்திருந்தது. புளொட்| அமைப்பின் நடவடிக்கைளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தன.
ஆனால் புளொட்| அமைப்பின் செயற்பாடுகளின் பின்னணி, மற்றய தமிழ் இயக்கங்களின் பின்னணியில் இருந்து மாறுபட்டு காணப்பட்டது.
புளொட்| அமைப்பின் செயற்பாடுகளுக்குப் பின்னால் இந்திய ஷறோ|வின் கைகள் நிச்சயமாக இருக்கவில்லை.
புளொட்| இற்கு அக்காலத்தில் அனுசரனை வழங்கிக்கொண்டிருந்தது வேறொரு தரப்பு.
எவருமே எதிர்பார்க்காத வகையில், புளொட்| அமைப்பு ஸ்ரீலங்கா அரசிடம் அனுசரனைகளைப் பெற்றே அக்காலகட்டத்தில் செயற்பட ஆரம்பித்திருந்தது.

கையறு நிலையில் புளொட்|:
புலிகளைப் போலவே புளொட்| அமைப்பும் ஆரம்பம் முதலே இந்தியாவின் கைகளுக்குள் சிக்கவில்லை.
இந்தியா வழங்கிய பயிற்சியை புளொட்| பெற்றிருந்தாலும், இந்தியாவின் கைக்கூலிகளாக அவர்கள் செயற்படத் தலைப்படவில்லை. அதனால் ஈழத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே புளொட்| அமைப்பு பலவழிகளிலும் இந்தியாவினால் ஓரங்கட்டப்பட்டே வந்தது.
சிறிது காலத்தின் முன்னர், புளொட்| அமைப்பு ஈழத்தில் தனது போராட்டத்தை விரைவுபடுத்துவதற்கு என்று வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்திருந்த பெரும் தொகை ஆயுதங்கள் தமிழ் நாட்டுக் கரையில் வந்திறங்கிய போது, இந்தியா அதனைக் கைப்பற்றியிருந்தது. அதேபோன்று தமிழ் நாட்டில் பலவழிகளிலும் ‘புளொட்| அமைப்பிற்கு எதிராக தனது நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டிருந்தது.

அதேவேளை, அளவிற்கதிகமான போராளிகளை உள்வாங்கிவிட்ட நிலையில் அவர்களைப் போஷிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புளொட்| அமைப்பினுள், உள் முரன்பாடுகளும் தலைவிரித்தாட அரம்பித்திருந்தன. திறமையான பல போராளிகள் புளொட் அமைப்பினுள் காணப்பட்டிருந்த போதிலும், சரியான வழிநடத்தல்கள் இல்லாத காரணத்தால் புளொட் அமைப்பு சரியானமுறையில் இயங்கமுடியாத ஒரு அமைப்பாகவே மாறி இருந்தது.
உட்படுகொலைகள், தலைமைத்துவ ஊழல்கள், கீழ்மட்டப் போராளிகளிடையேயான வறுமை, கந்தசாமி அணியினர் ஆடிய தாண்டவம் என்பன, புளொட்| அமைப்பை பலவழிகளிலும் செயற்படமுடியாத ஒரு அமைப்பாக மாற்றியிருந்தது.
கட்டுப்பாடிழந்த நிலையில் விரக்தியுடன் கூடிய பல போராளிகள் தமிழ் நாட்டில் சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் புளொட்டிலிருந்த ஒரு முக்கிய தளபதியான பரந்தன் ராஜன் என்பவர் இந்திய றோ| அமைப்பினால் உள்வாங்கப்பட்டு, முக்கிய போராளிகள் அடங்கிய ஒரு குழுவுடன் ஈ.என்.டி.எல்.எப்.(Eela National Democratic Liberation Front- ENDLF)என்ற அமைப்பை ஸ்தாபித்துச் சென்றுவிட, எஞ்சிய புளொட்| அமைப்பு செயற்பட முடியாத அளவு தனித்து நிற்கவேண்டி இருந்தது.
ஆரம்பம் முதலே புலிகளுக்கு எதிராக புளொட்| மிகவும் தீவிரமாக செயற்பட்டுவந்த அமைப்பென்ற காரணத்தினால், புலிகளுடனும் கைகோர்த்துக்கொள்ள முடியாத நிலை புளொட்டிற்கு இருந்தது. அத்தோடு, புலிகள் அமைப்பு மீது ஜென்மப் பகை கொண்ட ஒரு அமைப்பாகவே புளொட்| அமைப்பும், அதன் தலைமையும் செயற்பட்டு வந்திருந்தது.
புளொட்| அமைப்பின் இந்த கையறு நிலையை ஸ்ரீலங்கா அரசு நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது.
இந்தியப் படையின் வருகையின் பின்னர், எதுவுமே செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புளொட்| தலமையை தொடர்பு கொண்ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, புளொட்| அமைப்பிற்கு அபயம் அளிப்பதற்கு தாம் விரும்புவதாக தெரிவித்தார்.


அப்பொழுது ஈழமண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த புலிகள் மற்றும் இந்தியா- என்ற தமது இரண்டு எதிரிகளையும் மீறி, எவ்வாறு அங்கு மீண்டும் கால்பதிப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்த புளொட்| அமைப்பின் தலைமைக்கு, அத்துலத் முதலியின் அழைப்பு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.
ஸ்ரீலங்கா அரசின் அழைப்பின் பெயரில் புளொட்| அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பிற்கு வந்தார். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியுடன் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். இதனைத் தொடர்ந்து, புளொட்| அமைப்பு கொழும்பில் பல முகாம்களை அமைக்க ஆரம்பித்தது. பெருமளவு போராளிகள் அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவும் ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீலங்கா இராணுவத்தை திருப்திப்படுத்த புலிகள் மீது பாய்ச்சல்:
வவுனியாவிலும் பல புளொட்| முகாம்கள் அமைக்கப்பட்டன. அப்பொழுது வவுனியாவில் தங்கியிருந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, வவுனியாவில் புளொட்| அமைப்பு முகாம்களை அமைக்க உதவி புரிந்தார். மாணிக்கதாசன் தலைமையில் வவுனியாவில் புளொட் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது.
இதேபோன்று மட்டக்களப்பிலும், புளொட்| அமைப்பின் அரசியல்துறைச் செயலாளர் வாசுதேவா மற்றும் படைத்துறைச் செயலாளர் கண்ணன் தலைமையில் அந்த அமைப்பு காலூன்ற ஆரம்பித்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு போராளிகள் புளொட்| அமைப்பில் இருந்ததால், அந்தப் போராளிகளின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து தமது அமைப்பிற்கு ஆதவு தேடிக்கொள்ளும் எண்ணத்துடனும், தமது அமைப்பை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும், செயற்பட ஆரம்பித்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே மன்னாரில் புலிகள் அமைப்பு மீது புளொட்| தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் கில்மன், அர்ச்சுனா, ரஞ்சன் என்ற மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். புலிகள் மீது புளொட் உறுப்பினர்கள் காலாகாலமாக கொண்டிருந்த பகை உணர்வின் வெளிப்பாடாக இந்த தாக்குதல் இருந்தாலும், தமது புதிய எஜமானர்களாகிய ஸ்ரீலங்காப் படையினரைத் திருப்திப்படுத்துவதற்காகவே புளொட்| இந்தத் தாக்குதலை அப்பொழுது மேற்கொண்டிருந்தது.

புலிகளின் பதிலடி:

தமது உறுப்பினர்கள் மீது புளொட்| அமைப்பு மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி இந்தியப் படையினரிடம் தமது முறைப்பாட்டை தெரிவித்த புலிகள் சம்பந்தப்பட்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்கவேண்டும் என்று கோரினார்கள். இந்தியப்படை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராத காரணத்தினால், புலிகள் புளொட்டிற்கு பதிலடி கொடுக்க தயார் ஆனார்கள்.
மன்னாரில் புளொட்| அமைப்பு மீது புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 இற்கும் அதிகமான புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
மட்டக்களப்பில் பாசிக்குடா கடற்கரைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சில புளொட்| முக்கியஸ்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டார்கள்.
13.09.1987 அன்று கும்புறுமூலை சந்தியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் புளொட்| அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். புளொட்| அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவா, இராணுவத்துறைச் செயலாளர் கண்ணன், மட்டக்களப்பு பொறுப்பாளர் சுபாஸ், ஆனந்தன் போன்றவர்கள் உட்பட, இந்தியாவில் இருந்து அப்பொழுததான் இலங்கை திரும்பியிருந்த முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் புலிகளுக்கும் புளொட்| அமைப்பிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில், 70 இற்கும் அதிகமான புளொட்| உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும், இந்த இரு அமைப்புக்களுக்கும் இடையிலான மோதல்கள் பரவின.

புலிகளுக்கும் புளொட்| அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற இந்த மோதல்களை இந்தியப்படை வேடிக்கை பார்த்தபடி இருந்தது. இந்தியப்படையினரைப் பொறுத்தவரையில், இந்த இரு அமைப்புக்களுமே அவர்களுக்கு வேண்டப்படாத அமைப்புக்ளாகவே இருந்தன.

முன்னைய அத்தியாயங்கள்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-01) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-02) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-03) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-04) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-05) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-06) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-07) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-08) – நிராஜ் டேவிட்      

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-09) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-10) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-11) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-12) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-13) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-14) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-15) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-16) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-17) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-18) – நிராஜ் டேவிட்

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்