இந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள்.

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-7) – நிராஜ் டேவிட்

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்னாவுடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையில், குறிப்பாக தலைநகர் கொழும்பிலும், இலங்கையின் தென் பகுதிகளிலும் பாரிய எதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.
ஸ்ரீலங்கா அரசுடனான பிரச்சினையில் நேரடியாச் சம்பந்தப்பட்டிருந்த ஈழத்தமிழர்களையும், தமிழ் தலைவர்களையும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்துவிட்டு, இந்தியப் பிரதமரினால் எதேச்சாதிகாரத்துடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு சார்பான எந்தவொரு விடயமும் அடங்கியிருக்கவில்லை.

இப்படி இருந்தும் சிங்கள மக்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததுதான் வேடிக்கை. ஈழத்தமிழருக்கு சார்பாக இந்த நாட்டில் எதுவுமே நடந்துவிடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்த சிங்களப் பேரினவாதிகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கத் தலைப்பட்டார்கள்.
இலங்கையின் தென் பகுதியில் பாரிய கலவரம் வெடித்தது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இராணுவ மரியாதை அணிவகுப்பின்போது, ஷவிஜயமுனி விஜித்த றோகன டீ சில்வா| என்ற ஸ்ரீலங்காவின் கடற்படை வீரரால்; தாக்கப்பட்டார்.
சிங்கள மக்களாலும், ஈழத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காத இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம், உண்மையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் என்பனவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தவரும், இந்த ஒப்பந்தம் பின்நாட்களில் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு முன் நின்று உழைத்தவருமான, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.தீட்ஷித் அவர்கள், இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் பற்றி பின்னொருதடவை தெளிவுபடுத்திருந்தார்.

ஈழ மண்ணில் இந்தியப்படைகள் புலிகளுடன் யுத்தம் புரிந்து பலத்த அடி வாங்கிக்கொண்டு தடுமாறியபோது, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஐக்கிய சேவைகள் மன்றத்தில் (United Service Institute) ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10.03.1989 இல் நடைபெற்ற இந்த மாநாட்டில், ‘இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையினரது குறிக்கோளும், நடவடிக்கைகளும்| என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஜே.என்.தீட்ஷித் அழைக்கப்பட்டிருந்தார். இந்தியப்படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பட்டனளூ இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்திருந்த உற்காரணிகள் எவை அமைதிப் படை இலங்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன- போன்றன பற்றி தனது உரையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்த கருத்துக்களில் சில:


“…எங்களுடைய நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன், எங்களுக்கு நாங்களே செய்துகொண்டிருந்த வித்தியாசமான சோதனை நடவடிக்கை ஒன்றின் வெற்றியை நிச்சயப்படுத்திக்கொள்ளவே நாங்கள் இலங்கைக்கு செல்லவேண்டி இருந்தது.||
“…1972ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிகரித்து வந்த தமிழ் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுவதற்காக என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவந்த சில நடவடிக்கைகளின் விழைவாகவே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடவேண்டி ஏற்பட்டது. தனது சொந்தப் பலத்தையும், உள்நாட்டில் அவர்களிடம் இருந்த வளங்களையும் மட்டும் கொண்டு தமிழ் தீவிரவாதத்தை அடக்கிவிடமுடியாது என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் உணர்ந்துகொண்டது. அதேவேளை இந்தியாவில் வாழும் 50 மில்லியன் தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றிய சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு, சிங்களவர்களைப் பெரும்பாண்மையாகக்கொண்ட ஸ்ரீலங்கா அரசு, இந்தியாவிடம் உதவி கோரவும் தயங்கியது. இதனால் தமிழ் தீவிரவாதத்தை அடக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசானது வேறு சில சக்திகளிடம் இருந்து உதவிகளைபெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.||

“…1978ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டுவரை இலங்கை இராணுவம் தனது படைகளின் எண்ணிக்கையை 12,000 இலிருந்து 35,000 இற்கு அதிகரித்துக்கொண்டது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய யுத்தக்கப்பல்களை இலங்கையிலுள்ள கொழும்பு, திருகோணமலை, காலி துறைமுகங்களுக்கு கொண்டுவருவதற்கான சில இரகசிய ஒப்பந்தங்களை அந்த நாடுகளுடன் ஸ்ரீலங்கா அரசு செய்துகொண்டது. இங்கிலாந்தின் இரகசிய தகவல் துறை அமைப்பொன்றை ஸ்ரீலங்கா இராணுவம் தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்கு உதவியாக வரைவழைத்திருந்தது. அதேபோன்று, சின்பெட்|(Shin Bet), ஷமொஸாட்|(Mossad) போன்ற கூலிப் படைகளின் உதவியையும் ஸ்ரீலங்கா இராணுவம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது. தனது கடற்படைகளையும், ஊர்காவல் படைகளையும் பயிற்றுவிக்கவென்று கூறி பாக்கிஸ்தானிடம் இருந்தும் உதவிகளைப் பெற்றுவந்தது. ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா|(Voice of America) தனது ஒலிபரப்பை ஸ்ரீலங்கா மண்ணில் மேற்கொள்ளுவதற்கும் ஸ்ரீலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன் மூலம் சக்திவாய்ந்த, அதி நவீன தொலைத்தொடர்புக் கருவிகளை இலங்கையில் நிறுவி, இந்தியாவின் இராணுவ மற்றும் அரசியல் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்கக்கூடியதான அபாயம் எமக்கு அங்கு ஏற்பட்டிருந்தது. அத்தோடு, இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த பல நாடுகளிடம் இருந்தும் ஸ்ரீலங்கா போர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருந்தது. இதுபோன்ற ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவுமே நாங்கள் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ளவேண்டி ஏற்பட்டது||.

“……இந்தியாவில் இருந்து 15,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஷபியூஜி| போன்று இலங்கையும் இருந்துவிட்டால் இந்தியாவின் தலையீடு இலங்கையில் இல்லாது இருந்திருக்கும். ஆனால் இந்தியக் கரையில் இருந்து 18 மைல்கள் தொலைவில் மட்டுமே அமைந்துள்ள இலங்கை நாட்டில் நடப்பவற்றைப் பார்த்து நாம் கைகட்டிக்கொண்டு இருந்துவிடமுடியாது.||

“…..இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறைமைக்கும் நேரடியாகச் சவால் விட்டுக்கொண்டிருக்கும் சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் விடயத்தில் நாங்கள் அக்கறை செலுத்தினால் மட்டும் போதாது. எமது நாட்டின் பாதுகாப்பிற்கு மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுத்துவரும் விடயங்கள் பற்றியும் நாங்கள் அக்கறை காண்பித்தேயாகவேண்டி உள்ளது. 1498ம் ஆண்டு முதல் இந்தியாவின் தென்கரையில் இருந்து இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுவந்த அச்சுறுத்தல்களையும் நாம் இலகுவில் மறந்துவிடக்கூடாது. விஸ்தரிக்கப்பட்ட எமது கடற்படை, நவீனமயப்படுத்தப்பட்ட எமது விமானப்படை, நுணுக்கங்கள் பல சேர்த்துக்கொள்ளப்பட்ட எமது தொலைத்தொடர்புகள் என்பனவற்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, எமது நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் நாம் திருப்திப்பட்டுக்கொண்டு இருந்துவிட முடியாது. எமக்கெதிரான ஆபத்துக்கள் ஒருவேளை நேரடியான இராணுவத் தலையீடாக அல்லாமல், வேறு ரூபத்திலும் வந்துவிடக்கூடிய சாத்தியமும் உள்ளது. எமது அயல் நாடுகளில் ஏற்படுகின்ற அரசியல் நிர்ப்பந்தங்களும், சமுக மாற்றங்களும் கூட, எமது நாட்டின் கொள்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏப்படுத்தக்கூடியதான சூழ்நிலையை உருவாக்கிவிடும். ….இந்தியா இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு இவைகள்தான பிரதான காரணம்….||
இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ரஜீவின் நிலைப்பாடு:
இது இவ்வாறு இருக்க, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று வடக்குகிழக்கு இணைப்பு விடயத்தில் மாற்றுக் கருத்து கொண்டவராகவே இருந்தார். இதனை ராஜீவ் காந்தியே தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்னொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். றொகான் குணராட்ன என்ற பிரபல சிங்கள எழுத்தாளருக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றின் போதே ஜே.ஆர். இதனைத் தெரிவித்திருந்தார். ராஜீவ் காந்தி தன்னிடம் பேசும் போது, I don’t want these fellows to have the northeast merged. I will help you’ என்று தெரிவித்ததாகவும், தனக்கு உதவியாக அவர் இந்தியப்படைகளை இலங்கைக்கு அனுப்பச் சம்மதித்ததாகவும் ஜே.ஆர். அந்தச் செவ்வியில் நினைவு கூர்ந்திருந்தார்.

மறந்துவிடப்பட்ட ஈழத்தமிழர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது கேந்திர பாதுகாப்பையும், தனது பிராந்திய வல்லாதிக்கத்தையும் விஸ்தரிக்கும் நோக்கத்துடன்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது. புலிகளுக்கோ, ஈழத்தமிழருக்கோ ஒரு விடிவைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அதற்கு சிறிதும் இருந்தது கிடையாது. உண்மையிலேயே இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர், இந்தியாவின் நலனுக்காக விற்கப்பட்டிருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம், அவர்களது தியாகங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் போன்றவற்றின் பெறுபேறுகளை அடகு வைத்து, தனது நலனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்டிருந்த ஒரு நகர்வே இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம்.
ஷஇந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாகவோ, அல்லது தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ இல்லை என்று, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள்.


ஈழ மண்ணில் இந்தியப் படைகள்:
ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத அந்த ஒப்பந்தம் இவர்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, ஈழத்தமிழர்களைப் பாதிக்கும்படியான மற்றொரு நகர்வையும் இந்தியா மேற்கொண்டது.
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியது.
30.07.1987ம் ஆண்டு இந்தியப் படைகள், ஷஇந்திய அமைதி காக்கும் படைகள்| (ஐனெயைn Pநயஉந முநநிiபெ குழசஉந) என்ற பெயரில் ஈழ மண்ணில் கால்பதித்தன.
ஒரு மாபெரும் கெரிலாப் போரை அங்கு எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதை எதிர்பார்க்காத சுமார் ஒரு இலட்சம் இந்திய ஜவான்கள்| உற்சாகத்துடன் ஈழமண்ணில் வந்திறங்கினார்கள்.
தங்களது வருகை ஆயிரக்கணக்காண ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கப்போகின்றது என்றோ, கோடிக்கணக்கான அவர்களின் சொத்துக்களை நாசமாக்கப்போகின்றது என்றோ அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

இவர்களில் 3000 இற்கும் அதிகமான ‘ஜவான்கள்| மீண்டும் உயிரோடு தமது நாட்டிற்கு திரும்பிபோகமாட்டார்கள் என்பதையும், பாவம் அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

பகிரல்

கருத்தை பதியுங்கள்