இந்தியப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த கசப்பான முதல் அனுபவம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-9) – நிராஜ் டேவிட்


பலப்பரிட்சை
இந்தியாவில் உள்ள செகுந்தலாபாத் இராணுவத் தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு தொகுதி, 30.07.1987 அன்று இலங்கையில் வந்திறங்கியது.

இந்திய இராணுவத்தின் சில முக்கிய படைப்பிரிவுகள் இந்த முதலாவது தரை இறக்கத்தின் மூலம் இலங்கையில் தரையிறக்கப்பட்டன.

இந்தியாவின் 24வது காலாட் படைப்பிரிவு,
340வது காலாட் படைப் பிரிவு,
பிரந்திய ரிசேவ் படைப்பிரிவினர்,
10வது பரா மிலிடரி கோமாண்டோ படைப்பிரிவினர்,
65வது கவச வாகனப் பிரிவினர்,
91வது காலட் படைப்பிரிவு,
5வது மெட்ராஸ் ரெஜிமென்ட்,
8வது மராத்திய ரெஜிமென்ட்,

போன்ற படைப்பிரிவுகள் முதற் கட்டமாக தரையிறக்கப்பட்டன.

இலங்கையில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படைகளுக்கு மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், பொறுப்பாக வந்திருந்தார். அவருக்கு துணையாக, பிரிகேடியர் குல்வந் சிங் மற்றும் பிரிகேடியர் பெர்ணான்டஸ் போன்றோரும் வந்திருந்தார்கள்.

இந்தியப் படைகளின் இந்த முதலாவது தரை இறக்கத்திற்கு, AN-12 மற்றும் AN-32 வகை அட்டனோவ் ரக விமானங்கள் 24 பயன்படுத்தப்பட்டன. விமாணங்கள் மூலமான தரை இறக்கம் பலாலி விமாணத் தளத்திலும், கப்பல்கள் மூலமான தரையிறக்கம் காங்கேசன்துறை துறைமுகத்திலும் இடம்பெற்றன.

T-72 பிரதான யுத்தத் தாங்கிகள், கவச வாகனங்கள்( ;( Infantry Combat Vehicles) போன்ற கனரக யுத்த தளபாடங்களும் பெருமளவில் தரையிறக்கப்பட்டன.

இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னர் இந்தியப் படைகள் மேற்கொண்ட மிகப் பெரிய தரை இறக்கம் என்று போரியல் ஆய்வாளர்களால் வர்னிக்கப்பட்ட இந்த தரை இறக்கத்தை, இந்தியா தனது இராணுவத்தின் பலத்தை பரிசீலித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் திட்டமிட்டிருந்தது. வான் மூலமாகவும், கடல் வழியாகவும் இந்தியா தனது படைகளை எத்தனை வேகமாக தரை இறக்க முடிகின்றது என்பதை இந்தியா, இந்த தரை இறக்கத்தில் பரீட்சித்துப் பார்த்திருந்ததாக, இந்தியப்படைகளின் உயரதிகாரிகள் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்.

இப்படியான பாரிய ஏற்பாடுகளுடன் இந்திய இராணுவம், ‘இந்திய அமைதி காக்கும் படைகள்| (Indian Peace Keeping Force) என்ற பெயரில் இலங்கைக்கு வந்திறங்கின.

தமிழ் மக்களின் வரவேற்பு


இந்தியப்படைகள் யாழ்பாணத்தில் வந்திறங்கிய செய்தி காட்டுத் தீ போல்
தமிழ் மக்களிடையே பரவியது.

அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். தமது பிறவிப் பயனை அடைந்துவிட்டது போன்ற ஒரு சந்தோஷத்தில் அவர்கள் திளைத்திருந்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு அது ஒரு பொண் நாளாகவே இருந்தது. தம்மை மீட்க இந்தியப்படைகள் வந்திறங்கிவிட்டார்கள். இனி எதற்கும் கவலைப்படத்தேவையில்லை. ஸ்ரீலங்கா இராணுவம் பற்றியோ, அல்லது ஸ்ரீலங்கா விமாணங்களின் குண்டுவீச்சுக்களுக்கோ, இனிமேல் பயப்படத்தேவையில்லை என்று குதூகலித்தார்கள். விரைவில் தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்றே தமிழ் மக்கள் அனைவரும் நம்பினார்கள்.

தமிழீழத்தைப் பெற்றுத்தருவதற்கே இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்ததாக தமிழ் மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், காலாகாலமாக அவர்களிடம் இருந்துவந்த எதிர்பார்ப்புக்களின் வெளிப்பாடாகவே அவர்களது அந்த நம்பிக்கை இருந்தது.

ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமிழ் விடுதலை இயக்கங்கள் சுயமாக ஒரு தனி ஈழத்தை அமைக்கும் என்று அவர்கள் ஒருபோதும் நம்பியது கிடையாது. அல்பட் துரையப்பா, பஸ்தியாம்பிள்ளை கொலைகளில் தொடங்கிய இயக்கங்களில் ‘களையெடுப்பு| நடவடிக்கைகள், ஈழத்தில் பரவலாக இடம்பெற்று வந்த ‘வங்கிப் பணமீட்பு நடவடிக்கைகள்|, ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பதுங்கியிருந்து தாக்குதல் நடவடிக்கைகள் போன்று, ஈழ இயக்கங்கள் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைகளையும்; ஈழத்தமிழர்கள் பாராட்டி, ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்றாலும், இந்த இயக்கங்கள் தனி நாடொன்றைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் ஆரம்பம் முதலே எவரும்; நம்பிக்கை கொள்ளவில்லை.

யாழ்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கிவைப்பதில் ஈழ இயக்கங்கள் வெற்றி கண்டிருந்த காலகட்டத்தலும் கூட, ஈழ இயக்கங்கள் தனித்து நின்று தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எவருமே அப்பொழுது நினைத்துப் பார்க்கவும் இல்லை.

கடைசிக் கட்டத்தில் இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி, தனி ஈழத்தை ஸ்தாபிக்க உதவும் என்றே ஒவ்வொரு ஈழத் தமிழனும் நினைத்திருந்தான். எதிர்பார்த்திருந்தான்.

ஈழ விடுதலைக்காகப் போராடிய பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் கூட, இதே வகையிலான கருத்துக்களைத்தான் வெளியிட்டு வந்தன. இந்தியா பங்காளதேஷில் செய்தது போன்று, இலங்கைக்கும் தனது படைகளை அனுப்பி ஈழத்தை மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையையே, விடுதலை இயக்கங்களும்; தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து வந்;தன.

இந்த அடிப்படையில், இந்தியப் படைகள் ஈழமண்ணில் வந்திறங்கியபோது, ஈழத்தமிழர்களை மீட்கவே இந்தியப்படைகள் வந்துள்ளதாக தமிழ் மக்கள் நம்பினார்கள். ஆரவாரத்துடன் இந்தியப்படைகளை வரவேற்கவும் செய்தார்கள். வந்திறங்கிய இந்திய ஜவான்கள் திக்குமுக்காடும் அளவிற்கு தமிழ் மக்களின் வரவேற்பு யாழ்ப்பாணத்தில் இருந்தது.

கசப்பான முதல் சந்திப்பு


யாழ்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கின் முதல் பணி, புலிகளுடன் ஒரு சுமுகமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதாகவே இருந்தது.

புலிகளுடன் நட்புடன் கூடிய ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அந்தத் தொடர்பின் மூலம் இந்தியப்படைகளின் பணிகளைச் சுமுகமாக்கிக் கொள்ளவே அந்த உயரதிகாரி விரும்பினார்.

இந்த நோக்கத்துடன் அவர் புலிகளின் உள்ள10ர் தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார். புலிகளின் யாழ் நகர பொறுப்பாளராக இருந்த குமரன் என்பவர், மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கை, புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிடம் அழைத்துச் சென்றார்.

புலிகளின் வாகனத்தில், குமரனுடன் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கும், இந்தியப்படைகளின் பிரிகேட் கொமாண்டர் பெர்ணாண்டஸும் புறப்பட்டார்கள்.

யாழ் நகரின் மத்தில் சென்ற அவர்களது வாகனம், ஒரு வீட்டின் முன்பதாக நிறுத்தப்பட்டபோது, அந்த வீட்டின் வாசலில் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா நின்றுகொண்டிருந்தார்.

வாகனத்தில் இருந்து இறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மாத்தையாவுடன் பேச முற்பட்டபோது, ஷஷஜெனரல், நான் உங்களுடன் எதுவும் பேசத் தயாரில்லை… || என்று தெரிவித்த மாத்தையா, அவர்களை அந்த விட்டினுள் செல்லவும் அனுமதிக்கவில்லை.

பகிரல்

கருத்தை பதியுங்கள்