இரண்டாம் உலக யுத்தம்-சோவியத்தின் வெற்றிக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதம் காரணமா? (மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-15)

0
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-15)- நிராஜ் டேவிட்

நேற்றுவரை விவசாயிகள் மாத்திரமே இருந்த சோவியத்தில் எங்கிருந்து அத்தனை ஆயுதங்கள் முளைத்தன?

நவீன ஆயுதங்களுடன் சண்டைக்கு வந்த ஜேர்மனிய வீரர்களுடன் பொருதக்கூடிய அளவிற்கு வல்லமையான ஆயுத தளபாடங்களை எப்படி பெற்றார்கள் சோவியத் வீரர்கள்?

இதற்கு அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கிய ஆயுதங்கள் என்பதும் ஒரு காரணம் என்று கூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள். ஜேர்மனி மீதான சோவியத்தின் வெற்றிக்கான முதன்மைக் காரணமாக பார்க்கமுடியாவிட்டாலும்கூட, அமெரிக்காவின் ஆயுத உதவி என்பது, சோவியத்தின் வெற்றியில் கணிசமான பங்கினை வகித்திருந்தது என்பதை முற்றாக நிராகரித்துவிடவும் முடியாது. அமெரிக்கா, எதற்காக சோசலிசத்தின் தோற்றுவாயான சோவியத்திற்கு ஆயுத உதவிகளை வழங்கியது? சோவியத் யூனியனுக்கு எப்படியான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியிருந்தது? அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் எப்படியான தாக்கத்தினை களமுனைகளில் ஏற்படுத்தியிருந்தன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம் காணொளி

பகிரல்

கருத்தை பதியுங்கள்