எப்படி முடிவடைந்தது இரண்டாம் உலக யுத்தம்?(மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-18)

1
மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-18)- நிராஜ் டேவிட்

உலக வரலாற்றின் அதிக இழப்புக்களை ஏற்படுத்தியதும், மிகப் பெரியதும் என்றும் அழைக்கப்பட்ட இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது. ஜேர்மனியைக் கைப்பற்றியது சோவியத் யூனியன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஜப்பானின் இரண்டு நகரங்களை அணுகுண்டு வீசி அழித்தது அமெரிக்கா. மனித குலம் அறிந்திராத பயங்கரங்களையும், குரூரங்களையும் அநாயசமாக நிகழ்த்திக்காண்பித்த இந்த இரண்டாம் உலக யுத்தத்தில் சுமார் 60 – 70 மில்லியன் பேர்; உயிரிழந்திருந்தார்கள். உலக சனத்தொகையில் 3 வீதமான மக்கள் இந்த யுத்தத்pற்குப் பலியாகியிருந்தார்கள். யுத்தத்திற்கு பின்னர் பரசியிருந்த தொற்று நோய்கள் காரணமாக சுமார் 26 மில்லியன் மக்கள் மரணமடைந்திருந்தார்கள். அரசாங்கங்கள் சரிந்தன. புதிய தேசங்கள் பல உருவாகின. உலக வரைபடம் மாறியது. இவைகளுடன் சேர்த்து, ஒரு விசித்திரமான மற்றொரு யுத்தமும் அதே காலகட்டத்தில் ஆரம்பமாகியது. இரத்தத்தால் எழுதப்பட்ட இரண்டாம் உலக யுத்தத்தின் கொடூரமான முடிவுரைகள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

பகிரல்

1 Comment

கருத்தை பதியுங்கள்