யுத்தத்தின் விளிம்பில் அமெரிக்காவும் வட கொரியாவும்?

0

கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கி அழிக்கக்கூடிய Hwasong 15 என்ற ஏவுகணையை கடந்த வாரம் வட கொரியா வெற்றிகரமாகப் பரீட்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதையும் தனது ஏவுகனைத் தாக்குதல் எல்லைக்குள் வடகொரியா கொண்டுவந்துள்ளதாக, சில இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்க மற்றும் தென்கொரிய விமானப் படையினர் மிகப் பாரிய விமானப்படை கூட்டுப் பயிற்சி நடவடிக்கையை கொரிய தீபகற்பத்தில் ஆரம்பித்துள்ளார்கள்.

Operation Pyongyang என்ற பெயரிலான இந்த கூட்டுப்படைப் பயிற்சியில், அதிநவீன F-22 Raptor stealth jet fighters உட்பட 230 யுத்த விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
வடகொரியாவை யுத்தத்திற்குத் தூண்டும் செயல் என்று நடுநிலையான நோக்கர்களால் கருதப்படுகின்ற இந்தக் கூட்டுப்பயிற்சி பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுத யுத்தம் ஒன்றை ஆரம்பிக்கும்படி ட்ரம் நிர்வாகம் தம்மிடம் பிச்சை கேட்பதாக தெரிவித்துள்ளது.

யுத்தத்திற்கு மிக அருகில் அமெரிக்கா நெருங்கிவிட்டுள்ளதாக, அமெரிக்காவின் இராஜதந்திரி US Senator Lindsey Graham கருத்துவெளியிட்டுள்ளார்.

அதேபோன்று, அமெரிக்க அதிபர் டொனலட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலேசகர் HR McMaster கருத்துத் தெரிவிக்கையில், வட கொரியா மீது தாக்குதல் நடாத்தவேண்டிய கட்டாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாக கூறியுள்ளார்.

ஒரு யுத்தத்தின் விளிம்பில் வட கெரியாவும் அமெரிக்காவும் இருந்துகொண்டிருக்கின்றது பற்றியதான பார்வையைச் செலுத்துகிறது, IBC தமிழின் ‘இன்றைய பார்வையில்’ வெளியான இந்தக் காணொளி:

பகிரல்

கருத்தை பதியுங்கள்