மனித மாமிசம் உண்டார்கள்- leningrad சண்டைகளின் போது

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-12)- நிராஜ் டேவிட்

‘இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய களங்கள்’ என்று சில சண்டைகள் வரலாற்றுப் புத்தகங்களில் பதியப்பட்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு சண்டைக் களம்தான் லெனின் கிரட். லெனின் கிராட் மீது ஜேர்மனியப் படையினர் மேற்கொண்ட முற்றுகையை – The Siege of Leningrad அல்லது the Leningrad Blockade  என்று அழைக்கின்றார்கள். உலக வரலாற்றில் மிக அதிகமான காலம் நடைபெற்ற இராணுவ முற்றுகை என்று வரலாற்றில் பதிவாகிவிட்டுள்ள ஒரு முற்றுகைதான் லெனின் கிராட் முற்றுகை. சுமார் 872 நாட்கள் அதாவது சுமார் இரண்டரை வருடங்கள் நடைபெற்ற முற்றுகை அது . உலக வரலாற்றில் அதிக இழப்புக்களை ஏற்படுத்திய முற்றுகையும், இந்த லெனின் கிராட் முற்றுகைதான். இந்த முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பசிக்கொடுமையால் மனித மாமிசம் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்கள். அந்த அளவிற்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்த முற்றுகை அது. லெனின்கிராட் முற்றுகை வியூகங்கள் பற்றியும், அந்த முற்றுகையை முறியடித்த சோவியத் மக்களின் ஓர்மம் பற்றியும் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

பகிரல்

கருத்தை பதியுங்கள்