இன அழிப்பு என்றால் என்ன? (பாகம்-8)

0

இன அழிப்பு என்றால் என்ன? (உண்மையின் தரிசனம்) பாகம்-8- நிராஜ் டேவிட்

உலகத்தை உலுக்கிய ஒரு இன அழிப்பு பற்றி உண்மையின் தரிசனத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
ஜெனசைட் என்ற பெயரை உலகிற்கு அறிமுகப்படுத்திய இன அழிப்பு அது.
மனிதனையும், மனித்ததையும் நேரிப்பவர்களை அதிர்சிக்குள்ளாக்கிய கொடுமை அது.
முழு உலகையுமே திரும்பிப்பார்கவைத்த இன அழிப்பு அது.
இன அழிப்பு என்கின்ற கொடுஞ்செயலுக்கு எதிராக முழு உலகையும் கிளர்ந்தௌ வைத்த சம்பவம் அது.
இன அழிப்பினை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தண்டனை வழங்கும் பொறிமுறை உருவாகக் காரணமாக இருந்த நிகழ்வு அது.
இதனை ஒரு வரலாறு என்றும் கூறலாம். மனித வரலாற்றைக் கறைப்படுத்திய ஒரு கறுப்பு அத்தியாயம் என்றும் கூறலாம்.
11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்களைப் படுகொலை செய்த ஜேர்மனியின் ஹிட்லர் மேற்கொண்ட கொடூரமான இனஅழிப்புப் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்