Operation Desert Storm படை நடவடிக்கையும் அமெரிக்கா வகுத்த வியூகமும்|(மூன்றாம் உலக யுத்தம்? பாகம்-34)

0

மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-34)- நிராஜ் டேவிட்

வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளைத் தலைமைதாங்கிய ஜெனரல் Norman Schwarzkopf இன் யுத்த தந்திரோபாயங்கள் பற்றிக் குறிப்பிடும் போரியல் வல்லுனர்கள், மிக மிகச் சிறந்த திட்டங்களின் அடிப்படையில் ஒப்பரேஷன் டெசர்ட் ஸ்ரோம் (Operation Desert Storm) படைநடவடிக்கையை அவர் திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடுகின்றார்கள்.

அமெரிக்கப்படைகளுக்குப் பரிட்சயமில்லாத பாலைவனங்கள், பாலைவனங்களில் விதைக்கப்பட்டிருந்த கன்னிவெடிகள், சதாம் வசம் இருந்த இரசாயன ஆயுதங்கள், ஈராக்கின் பலமான ரிபப்ளிகன் கார்ட்ஸ் – போன்றனவற்றைக் கையாழுவதற்கு, ஜெனரல் Norman Schwarzkopf இன் தாக்குதல் திட்டத்தைவிட சிறந்த தாக்குதல்திட்டம் இருக்க முடியாது என்றே போரியல் நோக்கர்கள் தற்பொழுது அபிப்பிராயம் வெளியிடுகின்றார்கள்.

அத்தோடு, அமெரிக்கா தனது புதிய ஆயுதக் கண்டுபிடிப்புக்கள் பலவற்றை பரீட்சித்துப் பார்க்கவும், வளைகுடா யுத்தத்தைப் பயன்படுத்தி இருந்தது.

இவற்றைவிட, அமெரிக்கா என்றால் யார், அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டால் என்;னவெல்லாம் நடக்கும், அமெரிக்கா நினைத்தால் என்னவென்னவெல்லாம் செய்யும் – என்கின்ற உண்மையை வளைகுடா நாடுகளுக்கும், ஏன் உலகத்திற்கும் கூட- எச்சரிக்கையாக எடுத்துரைக்க Operation Desert Storm படை நடவடிக்கையை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தது அமெரிக்கா.

அண்மைக்காலப் போரியல் வரலாற்றில் மிக முக்கிய படை நடவடிக்கை என்று குறிப்பிடப்படுகின்ற Operation Desert Storm படை நடவடிக்கை பற்றிப் பார்க்கின்றது இந்த வீடியோ:

பகிரல்

கருத்தை பதியுங்கள்