ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-1) – நிராஜ் டேவிட்

0

ஈழத் தமிழர்கள் – குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய உளவியல் போருக்கு உள்ளாகிக்கொண்டு இருப்பதாக அண்மையில் என்னுடன் பேசிய ஒரு தென்னிலங்கை இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார்.
தென்னிலங்கையில் செயற்பட்டு தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவரும் அந்த சிங்கள இராணுவ ஆய்வாளர் குறிப்பிடும்பொழுது, ஈழத் தமிழர்களை -குறிப்பாக புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பணியகம்( ;( Directorate of psychological Operations) ஏற்கனவே உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருவதாகவும், புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்கா தேசத்திற்கும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருப்பதாக இந்த இரண்டு நாடுகளும் சந்தேகிப்பதால், புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும், அவர்களது உளவியல் பலத்தையும் குறிவைத்து இந்த இரண்டு நாடுகளும் மிகப்பெரிய அளவில் உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, அந்த ஊடகவியலாளரின் கூற்றில் நிறைய சாத்தியப்பாடுகள் இருப்பதை உணக்கூடியதாகவே இருக்கின்றது.
புலம்பெயர் தமிழர் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்ற கருத்துக்கள், இந்தியாவில் சில தலைவர்களைக் கொலை செய்யப் புலிகள் திட்டமிட்டுவருவதாக வெளியிடப்பட்டுள்ள கட்டுக்கதைகள், கே.பி. என்கின்ற விடுதலைப் புலி முன்னாள் முக்கிஸ்தரை சிறைப்படுத்தி, நிர்கதியாக நிற்கும் அவரை வைத்து மேற்கொள்ளப்படுகின்ற சதிகள் – இதுபோன்ற பல விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, புலம் பெயர் தமிழர்களின் உளவியலைக் குறிவைத்து ஒரு மிகப் பெரிய சதி நடைபெற இருப்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணரக்கூடியதாகவே இருக்கின்றது.
இந்த இடத்தில் சிலருடைய மனங்களில்; சில கேள்விகள் எழலாம்.
புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து எப்படியான உளவியல் நடவடிக்கையை எமது எதிரிகள் மேற்கொள்ளக்கூடும்?
அந்த உளவியல் நடவடிக்கைகள் எப்படியான விளைவினை ஈழத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தக்கூடும்?
இதனால் ஈழத் தமிழினத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்ன?
எதிரிகளின் இந்த உளவியல் நடவடிக்கையைத் தடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?
இவ்வாறு பல கேள்விகள் உங்களுடைய மனங்களில் எழலாம்.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களை பல பிரிவுகளாகப் பிரிக்கும் நோக்கம், எதிரிகளின் அந்த உளவியல் நடவடிக்கையின் பிரதான உள்நோக்கமாக இருக்கலாம்.
புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் இனி ஒரு விடுதலைப் போராட்டம் பற்றிச் சிந்தக்க முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவதென்பது, சிறிலங்கா-இந்திய உளவியல் நடவடிக்கைகளின் மற்றொரு நோக்கமாக இருக்கலாம்.
இவற்றை விட மற்றொரு குறிக்கோளும், இந்த உளவியல் நடவடிக்கைக்கு இருக்கின்றதாக, என்னுடன் பேசிய அந்த தென்னிலங்கை ஊடகவியலாளர் தெரிவித்தார்.
அதாவது, விடுதலைப் புலிகளையும், அந்த அமைப்பின் தலைமையையும் ஈழத் தமிழர் மற்றும் உலகத் தமிழர் மனங்களில் இருந்து முற்றாகவே அகற்றிவிடும் நோக்கம் சிறிலங்கா மற்றும் இந்தியா மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பற்றியும் உலகத் தமிழர் மனங்களில் இருக்கின்ற பிரமாண்டத்தை, ஈடுபாட்டை, நம்பிக்கையை, ஆர்வத்தை, அன்பை சுக்குநூறாக உடைத்தெறிவதென்பது எதிரியின் இன்றைய முக்கிமானதொரு நகர்வாக இருக்கின்றது.
மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதென்பதில் ஆரம்பமான இந்த முயற்சி, பல்வேறு ஊடகங்களை உருவாக்குவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, பல்வேறு வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்பதினூடாகப் பயணித்து, இன்று திட்டமிட்ட உளவியல் போர் என்கின்ற அளவிற்கு முன்னேறி இருக்கின்றது.


உலகத் தமிழர்கள் தங்களது கதாநாயகர்களாக, மிகப் பெரும் தியாகிகளாக நினைக்கும் மாவீர்களையும், தங்களது உன்னதமானதும் ஒப்பற்றதுமான தலைவனையும் அவர்களது மனங்களில் இருந்து அழிப்பதென்பது எவராலும் முடியாத காரியம் என்று எங்களில் பலர்; கூறலாம்.
‘ஈழத் தமிழர்களுக்கு உலகில் ஒரு முகவரியைத் தந்த அந்த உன்னதத் தலைவரை அந்த மக்கள் மறப்பதா- அது முடியவே முடியாது..’- இவ்வாறு பலர் வாதிடலாம்.
ஆனால்,  ‘psychological operations’  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தைக் கொண்டு, முடியாது என்று நினைக்கின்ற பல விடயங்களை சாதித்துக்காட்டிய வரலாறு உலகில் நிறையவே இருக்கின்றன.
உதாரணத்திற்கு ஹிட்லர் என்கின்ற ஒரு மிகப் பெரிய தலைவனை உலகமும், அவனது சொந்த ஜேர்மணிய மக்களும் முற்றாகவே நிராகரிக்கும்படியான உளவியல் நடவடிக்கையை அமெரிக்காவும், மேற்குலகும் மேற்கொண்டு அதில் இன்று மிகப் பெரிய வெற்றியையும் அடைந்திருக்கின்றது.
முதலாம் உலகப் போரில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த ஜேர்மனி, தனது பிரதேசங்கள் பலவற்றையும் அயல்நாடுகளிடம் ஒப்படைத்து, மீளமுடியாத பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி, உலகத்தின் மத்தியில் கூணிக் குறுகி நின்று கொண்டிருந்தது. அப்படியான நிலையில் இருந்த ஜேர்மணியை மீண்டும் ஒரு உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்திய ஒருவர்தான் ஹிட்லர்.
பாலங்கள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், ஆட்டோ மொபைல் தொழில்நுட்பம், என்று ஜேர்மனியை உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு நடாத்திச் சென்றவர் ஹிட்லர்.
தொழில்துறையில் ஜெர்மணியை அவர் ஒரு உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தார்.
ஒரு காலகட்டத்தில் ஜேர்மணியில் வேலையில்லாத ஒருவர் கூட இல்லை என்கின்ற அளவிற்கு அந்த தேசத்தை உலகின் தரவரிசையில் அனைத்து விடயங்களிலும் ஒரு உன்னத ஸ்தானத்திற்குக் கொண்டு சென்றவர்தான் ஹிட்லர்.
உலகின் நெருக்குவாரங்கள் அனைத்தையும் மீறி ஜேர்மணியின் இராணுவத்தை உலகமே வியக்கும் அளவிற்கு கட்டியமைத்தார்.


முதலாம் உலகப் போர் தோல்வியால் கிட்டத்தட்ட அநாதையாக விழுந்துகிடந்த ஜேர்மன் தேசத்தை, மீண்டும் நிமிர்ந்து உற்காரவைத்த- அதுவும் ஒரு உயரிய சிம்மாசனத்தில் உற்கார வைத்த ஒரு சிறந்த தலைவர்தான் ஹிட்லர்.
ஆனால் அந்த ஹிட்லர் என்கின்ற தலைவனை இன்று உலகம் முற்றாகவே நிராகரித்துவிட்டுள்ளது. உலகம் மாத்திரமல்ல ஹிட்லர் எந்த சேத்திற்காக பாடுபட்டாரோ, எந்த தேசத்தை உலகின் தரத்திற்கு உயர்த்தினாரோ, எந்த தேசத்திற்கு உலகில் ஒரு முகவரியைப் பெற்றுக்கொடுத்திருந்தாரோ, அந்த தேசமே இன்று ஹிட்லர் என்கின்ற தனது தலைவனை நிராகரித்து விட்டுள்ளது.
ஹிட்லர் பல நாடுகளை ஆக்கிரமித்தார் என்ற குற்றச்சாட்டு மேற்குலகால் அல்லது அவர் பற்றி அவதூறு பேசுபவர்களால் முன்வைக்கப்படுகின்றது.
ஆனால் ஹிட்லர் நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்படும் அதே காலப்பகுதியில், பிரித்தானியா உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து தன்வசம் வைத்திருந்தது என்கின்ற உண்மையை ஹிட்லரை தூற்றும் யாவரும் கருத்தில் எடுக்கத் தவறுகின்றார்கள்:.
அதைவிட ஜேர்மனி அயல்நாடுகள் மீது படைநடவடிக்கைகளை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அதே காலப்பகுதியில், இத்தாலி (07.04.1939இல்)அல்பேனியாவைக் கைப்பற்றியது, ரஷ்யா பின்லாந்தை ஆக்கிரமித்தது(30.11.1939), பிரித்தானிய நோர்வேயை ஆக்கிரமித்தது(08.04.1940), இத்தாலி எகிப்தை ஆக்கிரமித்தது(28.10.1940), பிரித்தானிய எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது(07.03.1941), பிரிட்டனும் பிரான்சும் சிரியாவை ஆக்கிரமித்தது(08.06.1941), ஈரானை பிரித்தானியா ஆக்கிரமித்தது(25.08.1941), பின்லாந்து, ஹங்கேரி, ருமெனியா போன்ற நாடுகள் மீது பிரித்தானியா போர்தொடுத்தது (05.12.1941), துனீஷியாவை அமெரிக்கா ஆக்கிரமித்தது(08.11.1942), மலேசியா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், போன்ற நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்தது(டிசம்பர் 1941).
இப்படி உலகின் பல நாடுகள் மாறி மாறி மற்றைய நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் ஜேர்மனி ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை ஆக்கிரமித்திருந்தது.
யூதர்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தினார் ஹிட்லர் என்றொரு குற்றச்சாட்டு…
உக்ரேனில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் 76 இலட்சம் மக்களைப் படுகொலை செய்து இனஅழிப்பொன்றை மேற்கொண்ட, சீனாவின் நான்கிம் பிரதேசத்தில் ஜப்பானியப்படைகள் இலட்சக்கணக்கான சீனர்களை படுகொலை செய்த காலப்பகுதியில்தான், ஹிட்லர் பல இலட்சம் யூதர்களையும், கமியூனிஸ்டுக்களையும் படுகொலை செய்திருந்தார்.
இனப்படுகொலைகளிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் உலகின் பல நாடுகளுமே சாதாரணமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஹிட்லர் என்கின்ற தலைவன் இதுபோன்ற காரியத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் ஹிட்லர் மாத்திரம் உலகினாலும், அவரது சொந்த மக்களினாலும் இன்று ஓரம்கட்டுப்பட்டதற்கு அவருக்கு ஏற்பட்ட தோல்வியும், அந்தத் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்காவும், அதனது நேச நாடுகளும் மேற்கொண்ட உளவியல் போரும்தான் காரணம்.
இன்று ஜேர்மனியர்கள் ஹிட்லரை முற்றாகவே மறந்துவிட்டார்கள்.
கொஞ்சம் நினைவு வைத்திருப்பவர்கள் கூட அவரைப்பற்றிய வெறுப்புடன்தான் ஹிட்லரை நினைவு வைத்திருக்கின்றார்கள்.
இத்தனையையும் சாதித்தது ‘ psychological operations’  என்று அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகள்தான்.
இன்று உலகத் தமிழர்களைக் குறிவைத்து எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உளவியல் நடவடிக்கைகள், இதனைத்தான் சாதிக்க நினைக்கின்றது.
இப்படியான ஒரு விளைவைத்தான் புலிகளுக்கும், அதனது தலைமைக்கும் ஏற்படுத்த நினைக்கின்றது சிங்கள தேசமும், இந்தியாவும்.


புலிகளின் தலைவர் ஒரு கதாநாயகனாக, விடுதலை வீரனாக, உதாரண புருஷனான தமிழ் மக்கள் மனங்களின் நீண்டகாலம் வலம் வருவதை சிறிலங்காவும், இந்தியாவும் விரும்பவில்லை. அவர் அஞ்சா நெஞ்சம் கொண்ட, யாருக்கும் அடிப்பணியாத ஒரு வீரனாக சரித்திரத்தில் வலம்வருவதை இந்த தேசங்கள் விரும்பவில்லை.
புலிகளின் தலைவர் பற்றி ஒரு கோளையான, கொடுரமான ஒரு கொலைகாரணான, ஒரு சமூக விரோதியான ஒரு பிம்பமே உலகத் தமிழர் மனங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்த தேசங்களது விருப்பமாக இருக்கின்றது.
இப்படியான ஒரு பிம்பத்தை உலகத் தமிழர் மனங்களிலும், உலகின் சரித்திரத்திலும் ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான் உளவியல் யுத்தம் ஒன்றை உலகத் தமிழரைக் குறிவைத்து இந்த நாடுகள் மேற்கொள்வதற்குத் தலைப்படுகின்றன.
இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி இதுதான்.
ஒரு உளவியல் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?
இரண்டு பெரும் தேசங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள இருக்கின்ற மாபெரும் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்களா?
என்னைப் பொறுத்தவரையில் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ளுகின்ற பலம் பெரிய அளவில் எம்மிடம் கிடையாது என்றுதான் நான் கூறுவேன்.
ஏன் என்றும், எதிரியின் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்றும் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்..

பகிரல்

கருத்தை பதியுங்கள்