உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-3) – நிராஜ் டேவிட்

0

உலகத் தமிழரைக் குறிவைத்து சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருகின்ற ஒரு சிங்கள ஊடகவியலாளருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு உதிரித் தகவலைத் தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த அந்தத் தகவல் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை.
ஆனால் அவர் கூறிய அந்தத் தகவல் பற்றி நாம் எமது அக்கறையைச் செலுத்துவது தவறல்ல என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதான ஒரு காட்சி ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அல்லவா? –


ரமேஷ் விசாரணைக்கு உற்படுத்தப்படும் காட்சியை சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) வேண்டுமென்றே ஊடகங்களுக்கு கசியவிட்டதாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.
உலகத் தமிழர் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகத் தமிழர் மனங்களில் காணப்படுகின்ற பிரமாண்டத்தை உடைக்கவும், சிறிலங்கா இராணுவத்தின் மேலான்மையை வெளிப்படுத்தவும் இந்த வீடியோக் காட்சியை சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பிரிவினர் வெளியிட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அளவில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதாராமாக அமைந்துவிடக்கூடிய ரமேஷின் விசாரணை வீடியோக்காட்சியை, சிறிலங்கா இராணுவமே வேண்டுமென்று ஊடகங்களுக்கு கசியவிட்டிருப்பார்;களா? இது எப்படிச் சாத்தியம்?- இவ்வாறு நான் எழுப்பிய கேள்விக்கு அவர் புன்னகைத்தபடி பதில் வழங்கினார்: ‘ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் மகிந்த என்ற அரசியல்வாதிதான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு அப்பால், அந்தத் தேசத்தின் நீண்ட கால வெற்றிதான் அதற்கு முக்கியம். ஒரு ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை விட, உளவியல் ரீதியாக உலகத் தமிழரைப் பலவீனமடைய வைப்பது இன்றைய காலகட்டத்திற்கு சிறிலங்கா தேசத்திற்கு அவசியமாக இருக்கின்றது. எந்த ஒரு இராணுவ புலனாய்வுப் பிரிவும், ஒரு தனி நபரை அல்லது சிலரது தனிப்பட்ட நலன்களை விட, தனது தேசத்தின் எதிர்காலம் பற்றித்தான் அதிகம் சிந்தி;த்துச் செயற்படும். இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் ரமேஷின் விசாரணை வீடியோவை சிறிலங்கா உளவியல் பணியகம் வெளியிட்டது. இதே போன்று, உலகத் தமிழர் உளவியலில் பலவீனத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், அதுவும் புலிகள் அமைப்பின் மிக மிக முக்கியமான ஒருவர் சம்பந்தமான வீடியோ காட்சிகளையும், அந்தப் பிரிவு வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது’ இவ்வாறு தெரிவித்திருந்தார்.
என்றுடன் பேசிய அந்த பத்திரிகையாளரின் கருத்து உண்மையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் அவர் கூறியபடி நடைபெற்;றிருப்பதற்கான சாத்தியப்பாட்டை நாம் இலகுவில் ஒதுக்கிவிடவும் முடியாது.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணியத்தின் சில செயற்பாடுகள் , சாதாரணமாக இராணுவத் தலைமைக்கோ, அல்லது சிறிலங்கா ஜனாதிபதிக்கோ கூடத் தெரியாமலேயே நடைபெறுவது வளக்கம். முள்ளிவாய்க்கால் சண்டைகளின் இறுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இரகசியச் சதி நடவடிக்கைகள்;, அப்பொழுது சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொண்சேகாவுக்கே தெரிந்திருக்கவில்லை. (அந்த நேரத்தில் ராஜபக்ஷ-பொண்சேகா மோதல்கள் ஆரம்பமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).


அதேபோன்று விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யை கைதுசெய்த இரகசிய நடவடிக்கையை சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரே நேரடியாகக் கையாண்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் பற்றி சிறிலங்காவின் அரச தலைவரோ அல்லது இராணுவத் தலைமைப் பீடமோ அறிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.
சாதாரணமாகவே, ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கின்ற இரகசியச் சதி நடவடிக்கைள் அனைத்துமே, அந்த நாட்டின் தலைமைக்கோ அல்லது இராணுவத் தலைமைக்கோ தெரிந்துதான் இருக்கவேண்டும் என்ற நியதி கிடையாது. தேசத்தின் நன்மை கருதி சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தனியாகவும் இயங்கிவிடவேண்டி இருக்கும். ஒரு நாட்டின் புலனாய்வுப் பிரிவினருக்கு இருக்கின்ற விசேட சலுகை இது.
ரமேஷினுடைய வீடியோ காட்சி விவகாரம் கூட, இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருப்பதற்கான சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிடவும் முடியாது.
ரமேஷ் மீதான விசாரணை வீடியோக் காட்சியைப் பொறுத்தவரையில், அந்தக் காட்சி (முன்னர் வெளிவந்த காட்சிகளில் சிலது போன்று) படைவீரர்களின் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக எடுக்கப்பட்ட காட்சிகள் போன்று இருக்கவில்லை. அந்தக் காட்சியின் சநளழடரவழைn இனைப் பார்க்கும் பொழுது, இது உயர் தொழில்நுட்பத்தினாலான வீடியோக் கமெராவினால் ஒளிப்பதிவு செய்பட்டுள்ளது உறுதியாகத் தெரிகின்றது. அப்படியானால் இந்தக் காட்சிகளை- ஒன்று இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபணம் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யூனிட் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும். அல்லது சாதாரணமாக முக்கிய விசாரணைகளை பதிவு செய்து வைத்திருக்கும் புலனாய்வுப் பிரிவினர் ஒளிப்பதிவு செய்திருக்கவேண்டும்.
யுத்தம் முடிவடைந்த ஓரிரு தினங்களிலேயே ரூபவானி கூட்டுத்தாபனத்தினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்துமே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்ததானச் செய்திகள் வெளியாகி இருந்தன.
சிறிலங்கா இராணுவத்தின் மீடியா யுனிட் வசமிருந்த யுத்தம் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆதாரங்களையும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கைப்பற்றியிருந்ததாகவும் பின்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. எனவே, யுத்தம் முடிவடைந்து சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் யுத்தம் தொடர்பான காட்சிகள் வெளிவருவதானால், அது நிச்சயம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் இருந்து வெளிவருவதற்கான சாத்திமே அதிகம் இருக்கின்றது.
ரமேஷ் மீதான விசாரணைக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது, அந்த விசாரணையை மேற்கொள்கின்ற நபர்கள் காட்சிப்படுத்தப்படுவது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அல்லது விசாரணை செய்யும் அதிகாரிகள் உள்ள காட்சிகள் கவனமாக அகற்றப்பட்டு அதன் பின்னரே அந்த வீடியோ காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது சிறிலங்கா இராணுவம்தான் ரமேஷை விசாரணைக்கு உட்படுத்துகின்றது என்பதற்கு, பின்னணியில் பேசப்படுகின்ற சிங்கள ஆங்கில வாக்கியங்களை(ஒலிகளை) தவிர வேறு ஆதாரங்களை அங்கு காண முடியவில்லை.
இந்தக் காட்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய சட்ட வல்லுனர் ஒருவர், இந்தக் காட்சி போர் குற்ற விசாரணைகளுக்கான ஒரு ளரிpழசவiஎந னழஉரஅநவெ டே தவிர நல்லதொரு documental evidence அல்ல என்று கூறியிருந்தார். ஒரு சாட்சி என்பது- அதுவும் சர்வதேச அளவில் ஒரு விசாரணைக்கு சாட்சியாக அமைய இருக்கும் ஆதாரம் என்பது, எந்த இடத்தில், என்ன சம்பவம், யாரால், எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை ஓரளவாவது நிரூபிப்பதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷ் தொடர்பான காட்சியில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை. அந்தக் காட்சியை வெளியட்டவர்களுக்கு அந்த நோக்கமும் பெரிதாக இருந்திருப்பதாகத் தெரியவில்லை.
ரமேஷ் என்ற புலிகளின் தளபதி சிங்களப் படையினரிடம் சடணடைந்திருப்பது, அந்தப் படையினரைப்; பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, சிறிலங்காப் புலினாய்வுப் பிரிவின் கீழ் செயற்படுகின்ற சிறிலங்காவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் (Directorate of Psychological Operation – DPO) இந்தக் காட்சியைக் கசிய விட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் மேலும் உறுதியாகின்றது.
ஸ்ரீலங்கா இராணுவத்தில் பின்னர் தளபதியாக பதவிவகித்த லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல்லேகல்ல தலைமையின் கீழ், 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உளவியல் நடவடிக்கைப் பிரிவு இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழ யுத்தங்களின் பொழுது மிகப் பெரிய வெற்றியை சிறிலங்கா அரசுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அமெரிக்க இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு (US Army Psychological Operation Group) ,இனால் நேரடியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு தன்னை மேலும் விஸ்தரித்துக்கொண்ட ஒரு பிரிவாகக் கூறப்படும் சிறிலங்காவின் உளவியல் பணியகம், 4ம் கட்ட ஈழ யுத்த காலகட்டத்தின் பொழுது களமுனைகளிலும், பின்களச் செயற்பாடுகளிலும் மிகப்பெரிய பங்கிளை ஆற்றியிருந்தது.
யுத்தம் முடிவடைந்த இந்த நேரத்திலும் சிறிலங்காவின் இந்த உளவியல் பிரிவினது செயற்பாடானது, சிறிலங்கா தேசம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை முறியடிக்கும் விதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட இந்த உளவியல் பிரிவே, ரமேஷ் தொடர்பான விசாரணைக் காட்சிகளை வெளியிட்டிருக்கலாம் என்று தற்பொழுது கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் வேறு சில முக்கியஸ்தர்கள் தொடர்பான மேலும் சில காட்சிகளையும் இந்தப் பிரிவினரே தொடர்ந்து வெளிவிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
எனவே இந்தக் கூற்றினை நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது.
அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் பற்றி ஆராய்கின்ற பொழுது, இந்த காட்சிகள் தொடர்பாக நாம் அதிக சிரத்தை எடுப்பது அவசியம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அத்தோடு, உளவியல் நடவடிக்கை நோக்கத்தை அடிப்படையாக வைத்து, உலகத் தமிழர் உளவியலைக் குறிவைத்து இதுபோன்ற ஒரு யுத்தம் எதிரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் உலகத் தமிழ் ஊடகங்கள் எப்படிச் செயற்படுவது அவசியம் என்பது பற்றியும் நாம் ஆராய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.
இது பற்றி அடுத்த வாரம் சற்று விரிவாகப் பார்ப்போம்

தொடரும்….

பகிரல்

கருத்தை பதியுங்கள்